சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

#India #Tamil People #Rain #HeavyRain #2023 #Breakingnews #Chennai
Mani
1 year ago
சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

வடக்கு அந்தமான் கடல், மியான்மர் கடற்கரை பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி உருவாகிறது. தொடர்ந்து 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைய கூடும்.

இதனால் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தின் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கே.கே. நகர், ஈக்காட்டுத்தாங்கல், திருமுடிவாக்கம், வேளச்சேரி, பழவந்தாங்கல், அனகாபுத்தூர், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!