உலக சிவன் அடியார்களின் அவசர வேண்டுகோள்

#SriLanka #Hindu #Temple #Festival
Prasu
1 year ago
உலக சிவன் அடியார்களின் அவசர வேண்டுகோள்

அனைவருக்கும் வணக்கம்.

ஓம் நமச்சிவாய

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்.

நமது ஆதி சிவன் ஆலயத்தின் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. ஆலயத்தின் திருப்பணிகளை இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்து அடுத்த வருடம் தை மாதம் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்ய வேண்டும் என்பதுவே எமது இலக்கு.

அந்த இலக்கை நோக்கி நாம் ஆலயத்தின் திருப்பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். இச் செயற்பாடுகளுக்கு அடியவர்களின் ஒத்துழைப்பு, தங்களின் ஆதரவு, தங்களது உதவிகள் எங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக நாம் எதிர்பார்த்த உதவிகள் ஒரு சில அடியவர்கள் அளித்த வாக்குறுதிகள் எம்மை வந்து சேராததால் ஆலயத்தின் திருப்பணிகளை தொடர்ந்து கொண்டு செல்வதில் நாம் பெரும் சவாலுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.

இவ்வாறான சூழலில் ஆலயத்தின் திருப்பணிகளை நிறைவு செய்ய தேவையான மூலப் பொருட்களான சீமந்து, கம்பி, மணல், செங்கற்கள் போன்றவற்றை கடன் அடிப்படையில் பெற்று செயல்பட்டு வருகின்றோம்.

ஆசாரி மார்களுக்கும், மேசன்மார்களுக்கும், கூலி ஆட்களுக்கும் கொடுக்க வேண்டிய ஊதியம் அல்லது கொடுப்பனவு கொடுக்கப்படாத நிலையில் இருந்து வருவது வேதனையாக உள்ளது.

இதனால் அவர்களது குடும்பங்கள் தங்களது அன்றாட கடமைகளை செயல்படுத்த சங்கடப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் நாம் நமது ஆதி சிவன் ஆலயத்தின் திருப்பணிகளை இடைநிறுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதே வேளை இவ் திருப்பணிகளை இடைநிறுத்தக் கூடாது என்பதற்காக ஊர் வசூல்களையும் செய்து வருகின்றோம். இருந்தாலும் எம்மால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது விடயமாக அப்பன் ஆதி சிவனின் அடியவர்களான உங்களது உதவிகளை நாடுகின்றோம். நமது ஆதி சிவன் ஆலயத்தின் திருப்பணிகளை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன் கொண்டு செல்ல உங்களது ஒத்துழைப்பினை பெற்று தாருங்கள் என மிகவும் வேண்டிக் கொள்கின்றோம்.

ஆதி சிவன் ஆலயத்தின் வங்கிக் கணக்கில் தற்பொழுது வெறும் ரூபா 18291.03 மாத்திரமே உள்ளது.

எல்லாம் வல்ல ஈசனே எம் ஐயனே எம் அப்பனே எல்லாம் உன் சோதனை 

கேள்வியும் நீயே விடையும் நீயே..... 

எங்களுக்கு வழி காட்டிடும் ஐயா.... 

ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்.


உங்களது ஒத்துழைப்பை வழங்க - 

Sivan Kovil Nirvagasabai

Account No: 75071564

Bank of Ceylon

Sammanthurai Ampara - Srilinka

தொடர்புகளுக்கு - 

+94 77 494 8319

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!