மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி: முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் நினைத்ததை அடைவீர்கள். பரணி: செயல்களில் இழுபறி உண்டானாலும் போராடி முடிப்பீர்கள். அரசாங்க விஷயத்தில் வெற்றி உண்டாகும். கார்த்திகை 1: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். தேவையற்ற அலைச்சலும், குழப்பமும் அதிகரிக்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் அமைதி காப்பது நன்மையாகும். ரோகிணி: இழுபறியாக இருந்த செயல்கள் இன்று நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். மிருகசீரிடம் 1,2: போட்டியாளர்களால் நெருக்கடி உண்டாகும் என்றாலும் அதை சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: பகைவர்கள் கை மேலோங்கும். தொழிலில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். திருவாதிரை: முன்னோர் ஆசியால் முயற்சி ஒன்று வெற்றியாகும். தொழிலில் போட்டியாளர்கள் விலகுவார்கள். புனர்பூசம் 1,2,3: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.

கடகம்

புனர்பூசம் 4: உறவுகளால் உதவிகள் கிடைக்கும். தொழிலில் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திப்பீர்கள். பூசம்: முயற்சியில் வெற்றிபெற திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் தனித்திறமை வெளிப்படும். ஆயில்யம்: எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும் கவனமாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.

சிம்மம்

மகம்: எதிரிகளால் சங்கடங்களை சந்தித்தாலும் உங்கள் செயலை நிறைவேற்றி வெற்றி அடைவீர்கள். பூரம்: மனதில் ஒருவித பயம் வந்துபோகும். எதிர்பார்த்தவற்றில் தடைகள் உண்டாகும். உத்திரம் 1: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

கன்னி

உத்திரம் 2,3,4: புதிய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர்கள். நட்புகளால் நன்மை அடைவீர்கள். அஸ்தம்: உங்கள் அணுகுமுறையால் நீங்கள் ஈடுபடும் செயலில் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். சித்திரை 1,2: இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும்.

துலாம்

சித்திரை 3,4: எதிர்பாராத நெருக்கடிகள் தோன்றினாலும் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். சுவாதி: புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும். உடல்நிலையில் உண்டான பாதிப்பு நீங்கும். விசாகம் 1,2,3: சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் திறமை வெளிப்படும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களின் வழியே சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். அனுஷம்: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். எதிர்பார்த்த செய்தி வரும். வருமானம் உயரும். கேட்டை: குழந்தைகள் வழியே சில சங்கடங்களை அடைவீர்கள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.

தனுசு: 

மூலம் மனதில் இருந்த சங்கடம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உங்கள் தேவைகள் நிறைவேறும். பூராடம்: உங்கள் சந்தோஷத்திற்காக ஒரு செயலில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உத்திராடம் 1: அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: கவனமாக செயல்படுவதால் இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். திருவோணம்: செயலில் இருந்த தடைகள் விலகும். உயர்ந்தோரின் நட்பினால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். அவிட்டம் 1,2: உங்கள் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சதயம்: பண வரவு திருப்தியளிக்கும். ஆரோக்கியத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: செயல்களில் ஒன்றிரண்டு சங்கடங்களை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடம் தோன்றும். உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். ரேவதி: மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும்.