அமெரிக்க குடியுரிமையை கைவிடமாட்டேன்: பசில்

#SriLanka #Basil Rajapaksa
Prathees
2 years ago
அமெரிக்க குடியுரிமையை கைவிடமாட்டேன்: பசில்

அமெரிக்க குடியுரிமையை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 முன்பு இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 கட்சியாக வேட்பாளரை முன்வைக்க வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுவாக வெளிப்பட்டு வருவதாகவும், மற்றபடி வேட்பாளர் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4