யூடியூபர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி
டிஜிட்டல் பண பரிவர்த்தனை , உள்நாட்டு பொருட்களுக்காக குரல் கொடுத்தல் ஆகியவை தொடர்பிலான காணொளிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வருமாறு யூடியூபர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தன்னுடைய உத்தியோகபூர்வ யூடியூப் சேனலில் காணொளியொன்றை வெளியிடுவதன் மூலம் இது தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், " இன்று ஒரு சக யூடியூபராக உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நானும் உங்களைப் போலவேதான் யூடியூப் சேனல் வைத்திருக்கிறேன்.
கடந்த 15 ஆண்டுகளாக யூடியூப் சேனல் மூலம் நாட்டுடனும், உலகத்துடனும் இணைந்திருக்கிறேன்.
எனக்கும் நல்ல எண்ணிக்கையில் சந்தாதாரர்கள் உள்ளனர். சுமார் 5,000 ஆர்வமுள்ள படைப்பாளிகளைக் கொண்ட ஒரு பெரிய சமூகம் இன்று இங்கே இருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.