பூநகரி செம்மண் குன்று தெளிகரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு(புகைப்படங்கள் இணைப்பு)

#SriLanka #Douglas Devananda #Meeting #people #Minister #sri lanka tamil news
Prasu
2 years ago
பூநகரி செம்மண் குன்று தெளிகரையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு(புகைப்படங்கள் இணைப்பு)

பூநகரி செம்மண் குன்று தெளிகரை 1/4 ஏக்கர் வீட்டுத்திட்டத்தில் வதியும் 20 குடும்பங்களுக்கான மக்கள் சந்திப்பு தெளிகரை முன்பள்ளியில் இன்று (28) இடம்பெற்றது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என 2016 இல் வழங்கப்பட்ட இவ்வீட்டு திட்டத்தில் தாம் எதிர்கொள்ளும் அடிப்படை வசதிகளின் நெருக்கடிகளை இச் சந்திப்பில் கலந்து கொண்டோர் தெளிவாக எடுத்துக் கூறினர்.

கூடுதலாக பெண் தலைமைத்துவமாக உள்ள இக் குடும்பங்கள் தொடர்ந்தும் வெள்ளப்பாதிப்பை மழைக்காலங்களில் எதிர்கொள்வதாக தெரிவித்தனர்.

images/content-image/1696094683.jpg

இடவசதி பற்றாக்குறை காரணமாக வீட்டுக்கான முற்றம் மற்றும் கிணறுகளை நிர்மாணிப்பதில் உள்ள பிரச்சினைகளும் கூடவே தமக்கான வீட்டுத் தோட்டத்தை அமைப்பதிலும் நிலவும் பிரச்சினைகளும் ஆராயப்பட்டன.

 அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக தமது குடியிருப்புடன் இணைந்து காணப்படும் நிலப் பகுதியில் மேலும் 1/4 ஏக்கர் நிலப்பகுதியை பெற்றுக் கொள்ள கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவ வேண்டும் எனவும் இதற்காக அமைச்சர் அவர்களை சந்தித்து பேச விரும்புவதாகவும் இதற்கான சந்திப்புக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு உதவுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர.

images/content-image/1696094725.jpg

இப்பகுதிக்கு அண்மையாக செம்மண் குன்று பெரியகுளம் பகுதியை அண்டியுள்ள 300 ஏக்கர் நெற் செய்கை க்கான நிலங்களை பொருத்தமான பயனாளிகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான ஏற்பாடுகளும் இதற்காக கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டன.

images/content-image/1696094711.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4