கடக ராசியினருக்கு வியாபாரத்தில் இருந்த பிரச்சனை தீரும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
கடக ராசியினருக்கு வியாபாரத்தில் இருந்த பிரச்சனை தீரும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : மனதில் குழப்பம் ஏற்படும். செயல்களில் சங்கடம் உண்டாகும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பரணி : உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். கார்த்திகை 1 : உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : திடீர் செலவால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர். வரவு செலவில் கவனம் தேவை. ரோகிணி : குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். பண பரிமாற்றங்களில் நிதானம் தேவை. மிருகசீரிடம் 1,2 : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். இழுபறியாக இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும். திருவாதிரை : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நேற்று இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். புனர்பூசம் 1,2,3: தெய்வ அருளால் நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர். எதிர்பாராத வருவாயால் பொருளாதார நிலை உயரும். பூசம் : பயணத்தில் சில நெருக்கடி தோன்றும். உங்கள் முயற்சி இழுபறியாகும். செயல்களில் நிதானம் அவசியம். ஆயில்யம் : வியாபாரத்தில் இருந்த பிரச்னை தீரும். புதிய வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். 

சிம்மம்

மகம் : உடன் இருப்பவர்களால் குழப்பமும், மன உளைச்சலுக்கு அதிகரிக்கும். பயணத்தை தவிர்ப்பது நல்லது. பூரம் : உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப் போகும். உத்திரம் 1 : இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கடவுளின் அருளால் எண்ணம் நிறைவேறும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர். செயல்களில் விழிப்புணர்வு அவசியம். அஸ்தம் : எதிர்பாராத சங்கடம் தோன்றினாலும் அதை சமாளித்து வெற்றி அடைவீர். பொன் பொருளில் கவனம் தேவை. சித்திரை 1,2 : உதவி புரிவதாக சொன்னவர் விலகிச் செல்வர். மனதில் தேவையற்ற பயம் வரும். 

துலாம்

சித்திரை 3,4 : செயலில் இருந்த தடை விலகும். பெரியவர்களின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். சுவாதி : புதிய நண்பர்களால் சில சங்கடம் தோன்றும். அக்கம் பக்கத்தினரால் தொல்லைக்கு ஆளாவீர்கள். விசாகம் 1,2,3 : நண்பர்கள் உதவியால் எண்ணம் நிறைவேறும். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். 

விருச்சிகம்

விசாகம் 4 : உடலில் இருந்த சோர்வு விலகும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். வர வேண்டிய பணம் வரும். அனுஷம் : கவனமுடன் செயல்படுவதால் நீங்கள் நினைத்ததை அடைவீர். எதிரி விலகிச் செல்வர். கேட்டை : வியாபாரத்தில் உண்டான நெருக்கடிக்கு தீர்வு காண்பீர். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். 

தனுசு

மூலம் : உங்கள் செயல்களில் கவனம் தேவை. இல்லாவிடில் சில இழப்புகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பூராடம் : குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். பெரியோரின் ஆலோசனை நன்மையை உண்டாக்கும். உத்திராடம் 1 : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். 

மகரம்:

உத்திராடம் 2,3,4 : உங்கள் வேலையில் கவனம் தேவை. வம்பு வழக்குகளில் நன்மை அடைய முடியாமல் போகும். திருவோணம் : அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒன்றை அடைவதில் போராட்ட நிலையை சந்திப்பீர். அவிட்டம் 1,2 : எதிர்பார்த்த பணம் வரும். தேவையற்ற முயற்சியில் ஈடுபட்டு சங்கடத்தை அடைவீர்கள். 

கும்பம்

அவிட்டம் 3,4 : புதிய நம்பிக்கையுடன் உங்கள் செயல்பாடு இன்று ஆரம்பமாகும். மதிப்பு மரியாதை கூடும். சதயம் : திட்டமிட்டிருந்த செயலை மாற்றம் செய்வீர்கள். நெருக்கடி உண்டானாலும் யோசித்து செயல்படுவீர். பூரட்டாதி 1,2,3: சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாகும். நீங்கள் நினைத்தவற்றை நினைத்தபடி செய்து முடிப்பீர்.

மீனம்

பூரட்டாதி 4 : உங்கள் விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை சீராகும். உத்திரட்டாதி : மனதில் குழப்பம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினரால் சில நெருக்கடிகள் தோன்றும். ரேவதி: புதிய முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.