சிவனொலிபாத மலைக்கு செல்ல கட்டாயம் அனுமதி பெற வேண்டும்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சிவனொலிபாத மலைக்கு செல்ல கட்டாயம் அனுமதி பெற வேண்டும்!

பருவக்  (சீசன்) காலங்களில் அனுமதியின்றி சிவனொலிபாத மலைக்கு செல்வது தடை செய்யபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். 

நுவரெலியா மாவட்ட செயலாளர்  நந்தன கலபட நேற்று (30.09)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து தெரிவித்த அவர்,  அனுமதியின்றி சிவனொலிபாத மலையில் உள்ள கால்த்தடத்தை வழிப்படலாம் என அன்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையல்ல எனவும் அவர் கூறியுள்ளார். 

சீசன் இல்லாத காலங்களில், ஸ்ரீ பாதஸ்தானத்திற்கு வருகை தரும் போது, ​​நல்லதண்ணி  மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்க உரிய நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4