வடமராட்சி நாகதம்பிரான் ஆலயதின் சிறப்புத் திருவிழாவான கப்பல் திருவிழா இடம் பெற்றுள்ளது

#SriLanka #Temple #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Kanimoli
7 months ago
வடமராட்சி நாகதம்பிரான் ஆலயதின் சிறப்புத் திருவிழாவான கப்பல் திருவிழா இடம் பெற்றுள்ளது

வரலாற்றுச் சிறப்புமிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயதின் சிறப்புத் திருவிழாவான கப்பல் திருவிழா நேற்றைய தினம் (சனிஇரவு 30/09) சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்றிரவு 11 கூட்டு தவில் நாதஸ்வர இசை நிகழ்வும், 

 அதனை தொடர்ந்து இந்திய இறையிசை பாடகி நித்திய சிறி மகாதேவனது இறையிசை பாடல் கச்சேரியும் இடம் பெற்றதை தொடர்ந்து இன்று அதிகாலை இரண்டு மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று நான்கு மணியளவில் கப்பலாட்டும் நிகழ்ச்சி இடம் பெற்றது.

 அதன் வரலாறு வருமாறு இந்தியாவிலே திருவானந்தபுரம் எனும் இடம் முற்றுமுழுதாக இயற்கையால் அழிவுற்ற நிலையில் அங்கு மீண்டும் மக்களை குடியேற்றும் எண்ணத்தோடு நாகர்கோவிலிக்கு வந்து அங்குள்ள மக்களுக்கு தாம் வினோத பொருட்களை விற்பனை செய்வதாக குறி அங்கு மக்களை அழைத்து அவர்களை கப்பலில் ஏற்றிகொண்டு திருவானந்த புரம் செல்ல முற்பட்டவேளை ஒல்லாந்தரது கப்பலில் பாம்புகளும் ஒவ்வொரு ஆட்களுக்கும் சமமாக ஏறிக் கொண்டன

 என்றும் இதனால் ஒல்லாந்தரது கப்பல் ஒரு அங்குலம் கூட நகரவில்லை, இந்நிலையில் ஒல்லாந்தரால் என்ன செய்வது என்று தெரியாது ஒவ்வொருவாராக கப்பலில் இருந்து இறக்லியபோது ஒவ்வொரு பாம்பாக இறங்கியதாகவும், இறுதியில் தலைவரை மட்டும் கப்பலிலிருந்தஹ இறங்கவிடாது தடுத்துவைத்திருந்ததாகவும், 

அப்போதும் கப்பல் நகராத நிலையில் அவரை கப்பலிலிருந்து இறக்கிய போது இறுதியாக இருந்த ஒரு பாம்பும் கடைசியாக இறக்கிய பின்னரே அந்த கப்பலை ஒல்லாரால் கொ்ணடு செல்லப்பட்டதாகவுமே இவ் கப்பல் திருவிழா வராலற்றை ஒரு நாடக, புராண வடிவில் நடிப்புக்களுடன் காண்பிக்கப்படுகிறது. இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.