சுடு நீர் கொதிகலனில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுடு நீர் கொதிகலனில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

சுடு நீர் கொதிகலனில் விழுந்து இந்திய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று (30.09) அதிகாலை மீகம தர்கா நகரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்து உயிரிழந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை  வெலிப்பன்ன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4