பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு தடை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பலர் ஏற்பாடு செய்த போராட்டத்திற்கு தடை!

பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல தரப்பினரால் இன்று (02.10) கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,  செராமிக் சந்தியிலிருந்து என்எஸ்ஏ சுற்றுவட்டத்திற்குச் சென்று அங்கிருந்து சாரணர் வீதிக்கு பிரவேசிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமூக ஊடகங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மதுஷன் சந்திரஜித், கல்வெவ சிறிதம்ம தேரர், துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின், தம்மிக்க முனசிங்க, தன்னே ஞானானந்த தேரர் உள்ளிட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4