ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை புறக்கணிக்க வேண்டாம் - நிமல் சிறிபாலடி சில்வா!

#Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news
Thamilini
2 years ago
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை புறக்கணிக்க வேண்டாம் - நிமல் சிறிபாலடி சில்வா!

சரியான நேரத்தில் புறப்பட முடியாத பட்சத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களை புறக்கணிக்க வேண்டாம் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் இரு விமானங்கள் தாமதமாக புறப்பட்ட காரணத்தினால் பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர். இந்நிலையில். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  ஸ்ரீலங்கன் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், பயணிகளை மற்ற விமானங்களை பயன்படுத்துமாறு கூற வேண்டிய நிலை ஏற்படும் என்றும், விமான தாமதம் குறித்து அதிகாரிகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுவதாகவும் கூறினார். 

எவ்வாறாயினும், சில அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறுகிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4