நாட்டில் இடம்பெறும் தொடர் கொலை: டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க நடவடிக்கை

#SriLanka #government #Lanka4
Prathees
2 years ago
நாட்டில் இடம்பெறும் தொடர் கொலை: டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்க நடவடிக்கை

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தயாராக உள்ளது.

 நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் கொலைகளின் அடிப்படையில் எதிர்வரும் வாரத்தில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 தற்போதைய கொலைகளை கட்டுப்படுத்த ஒரு மாத கால அவகாசம் தருவதாகவும் இல்லை என்றால் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிப்பதாகவும் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

 கொலைகளை கட்டுப்படுத்துவதில் அமைச்சர் தவறியதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4