காலையில் இந்த முறைப்படி மூலிகை கோப்பி குடித்து சுவாச பிரச்சனைகளை தீருங்கள்...

#Health #Benefits #herbs #Lanka4 #ஆரோக்கியம் #பயன்பாடு #மூலிகை #லங்கா4 #symptoms
காலையில் இந்த முறைப்படி மூலிகை கோப்பி குடித்து சுவாச பிரச்சனைகளை தீருங்கள்...

இயற்கை முறைப்படி நோய் வராமலும், நோய்கள் ஏற்படும் நிலையில் அதிக மருந்துகள் இல்லாமலும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள சில எளிய நடைமுறைகளை கையாண்டால் போதும். 

நோயின்றி ஆயுளை காத்துக் கொள்ள முடியும்.தினமும் காலையில் மூலிகை காபி குடித்து பழகிக் கொள்ள வேண்டும். மூளையின் நரம்பு மண்டலத்தைத் தூண்டி தற்காலிகமாக புத்துணர்ச்சி தரும் பால் சேர்ந்த காபி, டீ குடிப்பதை முழுவதுமாக நிறுத்திக் கொண்டு, மாறாக சுக்கு, மிளகு, தனியா, துளசி ஆகியவற்றை வீட்டிலேயே அரைத்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, அதைக் கொண்டு காபி தயாரித்து குடியுங்கள்.

images/content-image/1696327154.jpg

 இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்துக் கொள்வது மிகுந்த பயனைத் தரும். சளி, இருமல், இரைப்பு உள்ளிட்ட சுவாச நோய்கள் நெருங்காது. காபி, டீ குடிப்பதால் நரம்பு மண்டலம் தொடர்ந்து தூண்டப்பட்டு நாளடைவில் அது பலவீனமாகி விடுகிறது. இதை மூலிகை காபி தவிர்த்து விடும்.

மூலிகை காபியை விரும்பாதவர்கள் எலுமிச்சை சாறில் தேன் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம். ஒரு கப் வெந்நீரில் அரை எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து எலுமிச்சை – தேன் சாறு தயாரித்து குடிக்க வேண்டும். 

எலுமிச்சை மூலம் வைட்டமின் – சி உள்ளிட்ட சத்துக்கள் கிடைக்கும். தேன் கலப்பதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும். சளி, இருமல் பிரச்னை வராது. மேலும் சளியையும் வெளியேற்றும். தினமும் மூலிகை காபி குடிப்போம், நோயின்றி நலமுடன் வாழ்வோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4