மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு!

#Tamil Nadu #2023 #Breakingnews #Fever #Dengue
Mani
1 year ago
மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு!

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்து சில நாட்களாக டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சுகாதார சீர்கேடுகள் மற்றும் கொசு தொல்லைகள் அதிகரித்ததின் காரணமாக இந்த டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. டெங்கு காய்ச்சலை தடுப்பதற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும், டெங்கு காய்ச்சல் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதனிடையே, மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 16 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இதில் நேற்று ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் பொது மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. சுகாதார பணிகளை வேகப்படுத்துவதோடு, கொசு ஒழிப்பிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்களும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!