வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ள டொலர்களை மீள கொண்டுவருமாறு வலியுறுத்தல்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெளிநாட்டில் பதுக்கிவைத்துள்ள டொலர்களை மீள கொண்டுவருமாறு வலியுறுத்தல்!

கடந்த சில வருடங்களில் 56 பில்லியன் அமெரிக்க டொலர்கள் சக்தி வாய்ந்த நபர்களால் வெளிநாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (03.10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.  

இந்த ஆண்டு மட்டும் 9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்த நபர்களின் பணத்தை மீளக் கொண்டுவருமாறு உத்தரவிடுவதற்கான விசேட பிரேரணை ஒன்றை தான் முன்மொழிவதாகவும் அவர் கூறியுள்ளார். 

சில பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் தலா 150 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். 

இவ்வாறாக வெளிநாடுகளில் நிறுத்தப்பட்ட நிதிகள் திரும்பக் கொண்டுவரப்பட்டால் இலங்கை மற்ற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கடன்களையும் தீர்க்க முடியும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு உறுப்பினர்களை நியமிக்கத் தவறியமைக்காக அரசியலமைப்பு பேரவையை அவர் கடுமையாக சாடினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!