விடுதலையான தனுஷ்க நாடு திரும்பினார்

#SriLanka #Srilanka Cricket
Prathees
2 years ago
விடுதலையான தனுஷ்க நாடு திரும்பினார்

 அவுஸ்திரேலியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து விடுதலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தனுஷ்க குணதிலக்க 11 மாதங்களின் பின்னர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

 அவுஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் திகதி பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டிருந்தார்.

 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க தடுத்து வைக்கப்பட்டதுடன், பின்னர் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 இவ்வாறு கடந்த 11 மாதங்கள் அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளில், தனுஷ்க குணதிலக்க குற்றமற்றவர் என அந்த நாட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 28ம் திகதி அறிவித்திருந்தது.

 இந்த நிலையில், தனுஷ்க குணதிலக்க இன்று (03) நாடு திரும்பியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4