இலங்கையில் அதிகரித்துள்ள போதை பழக்கவழக்கம் - கிளி நொச்சியில் சில கிராமங்கள் சுற்றி வளைப்பு

#SriLanka #Police #Student #Kilinochchi #people #drugs #Lanka4
Prasu
2 years ago
இலங்கையில் அதிகரித்துள்ள போதை பழக்கவழக்கம் - கிளி நொச்சியில் சில கிராமங்கள் சுற்றி வளைப்பு

இலங்கையில் போதைவஸ்துக்களின் ஆட்டம் பாராளுமன்றம் வரை பேசப்படும் ஒரு புற்று நோயாக மாறியுள்ளது.

 கடல் வழியாலும், ஆகாய வழியாலும் பல நாடுகளில் இருந்து நாளுக்கு புதுவித போதைவஸ்துக்கள் இலங்கையில் அறிமுகமாக்கப்படுகிறது. கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்வோரும் நுகர்வோரும் அதிகரித்த வண்ணமே உள்ளனர். 

 இது தென்னிலங்கையில் அதிகமாக பாவனையில் இருந்தாலும் தமிழ் பேசும் பகுதிகளில் 2009 வரை சுமார் முப்பது ஆண்டுகாலப்பகுதியில் அறவே கிடையாது. இப்போதைவஸ்துக்கள் சாதாரணமாக இப்பொழுது பாடசாலைகளில் மாணவ, மாணவிகளை குறிவைத்து விற்கப்படுகிறது.

 இந்த வியாபாரத்துக்கு கணிசமாக சில பாதுகாப்பு அதிகாரிகளும் இலஞ்சத்துக்காக கண்டும் காணாமல் இருக்கின்றனர் .அதிலும் தமிழ் பொலீசாரில் சிலர் இதனால் வருமானம் ஈட்டுவதாலும் அனைத்து பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் அவப் பெயரை உண்டுபடுத்துகிறது. 

 இதை நுணுக்கமாக அறிந்த சில தமிழ், சிங்கள, இஸ்லாமிய நேர்மையான அதிகாரிகள் ஒரு கூட்டாக இணைந்து ஜனாதிபதி வரை இப்போதை பொருட்கள் நாட்டையும் நாட்டின் எதிர்கால சந்ததியினரையும் சீரழிக்கிறது என எடுத்துக் கூறியுள்ளனர். 

 இதை செவிமடுத்த ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்து எங்கெங்கு போதைப் பொருள் பாவனையில் உள்ளதோ அங்கெல்லாம் இரகசிய தேடுதலை நடாத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இதற்குள் போதைக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களினதும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

 இந்தகுழுவின் தீவிர செயற்பாட்டின் ஊடாக விரைவில் போதையை கட்டுப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. மீனவர்கள், வெளி நாட்டவர்கள் தங்கும் விடுதிகளில் வேலை செய்பவர், பாடசாலையில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சிலர், இக்குழுவோடு இணைந்து கடமையாறுகிறார்கள்.

 இவ்வகையில் எமக்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி குறிப்பிடுகையில், நாட்டில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் காணப்பட்ட போதிலும் கிளிநொச்சியில் கனகபுரம், விநாயகபுரம், செல்வாநகர், புதுமுறிப்பு, ஊற்றுப்புலம், விவேகானந்தநகர், இரணைமடுச்சந்தி, போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாக கிடைக்கின்றன.

இது இங்குள்ள் பொலிசாருக்கு தெரியாமலும் இல்லை. மிகவும் ஆபத்தான நிலையில் கிளநொச்சி உள்ளது.   இங்கே ஆட்டோ றைவர்களில் சிலர் சில பாதுகாப்புப் படைகளுக்கே போதைவஸ்தை வினையோகிப்பதாக ஒரு நேர்மையான பொலீஸ் அதிகாரி கூறுகிறார்.

 இப்பொழுது யாழ்ப்பாணம்.வவுனியா கிளிநொச்சி ஆகிய இடங்களில் கண்டு பிடிக்க முடியாதஅளவில் இரகசியமாக போதைப்பொருள் தாதாக்கள் முற்றுகையிட்டுள்ளனர். விரைவில் போதை வஸ்து கலாச்சாரம் முடிவுக்கு வரப்படாவிடின் சமூகம் அழிவடைவதை தடுக்கமுடியாது.

 ரணில் அரசு தமது ஆட்சியை தக்க வைக்க போதைப்பொருட்களை ஒழித்து சிங்கபூரை போல கொண்டு வரவேண்டுமென காய் நகர்த்துகிறதாம். அதனை மனதில் வைத்தே சில தினங்களின் முன்னர் நான் விரைவில் இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன் என கூறியது குறிப்பிடத்தக்கது. 

 எது எதுவாக இருப்பினும் இலங்கையில் மட்டுமல்ல உலகிலேயே மதுபானம் உட்பட எவ்வித போதைப் பொருளும் இருக்கக்கூடாது எனவும், ஆயுதங்கள் நாடுகளை ஆளக்கூடாது என்வும் பல பொது நல விரும்பிகள் கூறுகின்றனர். 

 அதுவே எமது லங்கா4 ஊடகமும் விரும்புகிறது. தமிழர்களின் எதிர்காலம், இலங்கையின் எதிர்காலம், மும்மத ஒற்றுமை, தமிழ் சிங்கள ஒற்றுமைக்கும் உலக அமைதிக்கும், சமாதானத்துக்கும் ஓங்கி குரல் கொடுப்பதோடு நிற்க்காமல் வரும் காலங்களில் வறியவர்களின் வாழ்வுக்கும், இளைஞர், யுவதிகளின் மேம்பாட்டுக்கும் முதுகெலும்பாக இருப்போம். 

 “போதை இல்லாத உலகம் காண்போம்” 

 “போர்கள் இல்லாத புலர்வை காண்போம்” 

 “கண்ட இடமெல்லாம் பசுமை வேண்டும்” 

 காண்போம், அடைவோம் நினைவாய் வெல்வோம்” 


 -Lanka4 ஊடகம்-

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4