எதிரியின் சதியை முறியடிக்கும் தனுசு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
எதிரியின் சதியை முறியடிக்கும் தனுசு ராசிக்காரர்கள் - இன்றைய ராசிபலன்

மேஷம்: 

அசுவினி : நினைத்தது நிறைவேறும். உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பரணி : அந்நியர் வழியே சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். கவனமாக செயல்படுவது நல்லது. கார்த்திகை 1 : திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்,பிரச்னைக்கு முடிவு காண்பீர். உங்கள் செயல்களில் தெளிவு ஏற்படும். ரோகிணி : செயல்களில் குளறுபடி தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. மிருகசீரிடம் 1,2 : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திறமை வெளிப்படும். வழக்கமான செயல் நன்மையில் முடியும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : செலவுகள் அதிகரித்தாலும் ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். திருவாதிரை : வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். குடும்பத்திற்கான செலவு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : உறவினர் உதவி இல்லாததால் உடலும் மனமும் சோர்வடையும். வாகன பயணத்தில் கவனம் தேவை.

கடகம்

புனர்பூசம் 4 : செயல்களில் லாபத்தை காண்பீர். எதிர்பாராத வரவு உண்டு. நேற்றுவரை இருந்த பிரச்னைக்கு தீரும். பூசம் : இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வராமல் இருந்த பணம் வரும். ஆயில்யம் : வருமானத்தில் தடை விலகும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம் : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். சிலருக்கு சொத்து சேரும். பூரம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் செயலில் சங்கடம் தோன்றும். ஒரு வேலை இழுபறியாகும். உத்திரம் 1 : வியாபாரத்தை விரிவு செய்ய நண்பருடன் ஆலோசிப்பீர். இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

கன்னி:

உத்திரம் 2,3,4 : நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். மனதில் தெளிவு உண்டாகும். அஸ்தம் : உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பில் தடை ஏற்படும். பயணத்தில் சிரமம் தோன்றும். மனச்சங்கடம் அகலும். சித்திரை 1,2 : பிரச்னைகளை சமாளித்து முயற்சியில் வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

துலாம்

சித்திரை 3,4 : வியாபாரத்தில் உங்கள் முயற்சி இழுபறியாகும் என்பதால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். சுவாதி : நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்னை உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. விசாகம் 1,2,3 : தேவையற்ற சங்கடங்களால் நெருக்கடிகளுக்கு ஆளாவீர். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விசாகம் 4 : எதிர்பாராத சங்கடங்களால் மனதில் குழப்பம் அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற வருவாய் ஏற்படும். அனுஷம் : வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் உங்கள் எண்ணம் நிறைவேறும். கேட்டை : உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரிகளால் நெருக்கடி உண்டாகும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

மூலம் : நீங்கள் எதிரியின் சதியை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். பூராடம் : பணி புரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத பயம் தோன்றும். உத்திராடம் 1 : விவேகத்துடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதித்து முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்

மகரம்

உத்திராடம் 2,3,4 : நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கடைசி நேரத்தில் உங்கள் கைக்கு வரும்.மகிழ்ச்சியான நாள். திருவோணம் : உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். அவிட்டம் 1,2 : மற்றவர்களால் முடியாத ஒரு வேலையை செய்து முடித்து லாபம் காண்பீர்கள். வரவு அதிகரிக்கும்.

கும்பம்:

அவிட்டம் 3,4 : வாழ்க்கைத் துணையுடன் சச்சரவில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் கவனம் தேவை. சதயம் : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். தாய்வழி உறவுகளால் பொருளாதார சிரமம் நீங்கும். பூரட்டாதி 1,2,3 : தேவையற்றப் பிரச்னை தோன்ற வாய்ப்பிருப்பதால் அமைதி காப்பது நல்லது.

மீனம்

பூரட்டாதி 4 : அலுவலகப் பணியில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். பொறுமை தேவை. உத்திரட்டாதி : உங்கள் எண்ணம் பூர்த்தியாகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். ரேவதி : உதவி புரிவதாக சொன்னவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பர். பேச்சில் கவனம் அவசியம்.