சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு : இன்று வெளியாகும் புதிய அறிவிப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு : இன்று வெளியாகும் புதிய அறிவிப்பு!

மாதாந்த விலை சூத்திரத்தின்படி இவ்வருடத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (04.10) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.  

லிட்ரோ எரிவாயு நிறுவனம் செப்டம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.  

இதன்படி 2,982 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3,127 ரூபாவாக விநியோகிக்கப்படுகிறது. 

மேலும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மின்கட்டணத்தை உயர்த்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4