தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 21 பேர் மருத்துவமனையில்

#SriLanka #Sri Lanka President #Accident #Hospital
Mayoorikka
2 years ago
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறி பள்ளத்தில் பாய்ந்து விபத்து: 21 பேர் மருத்துவமனையில்

இறுதிச் சடங்கில் பங்கேற்ற தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் லொறியில் பயணித்த தோட்டத் தொழிலாளர்கள் 21 பேர் மஸ்கெலியா மற்றும் டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையில் (03) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்த விபத்து இரவு 9 மணியளவில் மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் மஸ்கெலியா பிரன்சுவிக் தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

 காயமடைந்த தரப்பினர் ஹட்டன் காஸ்ட்லரி பகுதியில் இறுதி சடங்கில் கலந்து கொண்ட போது மஸ்கெலியா பகுதியில் பேருந்து இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.மஸ்கெலியா நகரில் இருந்து சிறிய லொறியுடன் மஸ்கெலியா பிரன்சுவிக் தோட்டத்திற்கு வாடகை அடிப்படையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது லொறி வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளது. 

50 அடி பள்ளத்தில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் தவறி விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்து இடம்பெற்ற போது லொறியில் 23 பேர் பயணித்துள்ளதாகவும் அவர்களில் 21 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களில் 17 பெண்களும் 4 ஆண்களும் அடங்குவதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 காயமடைந்த 04 பேர் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலைக்கும், ஆபத்தான நிலையில் இருந்த 17 பேர் திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.

 லொறியின் அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்ற காரணத்தினால் லொறி கட்டுப்பாட்டை இழந்து லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் லொறியின் சாரதியும் விபத்தில் காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4