விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

#SriLanka #Sri Lanka President #sports
Mayoorikka
2 years ago
விளையாட்டு அமைச்சரின் கிரிக்கெட் ஒருங்கிணைப்புக் குழுவுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சிதத் வெட்டிமுனி தலைமையில் 3 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை செயற்பட வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் சமத் மொராயிஸ் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இலங்கை கிரிக்கெட் (SLC) தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை (01), விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் சபைகளை கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும் மற்றும் ஒருங்கிணைக்கவும் 03 பேர் கொண்ட சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமித்தார்.

 இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சிதத் வெட்டிமுனி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச மற்றும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்ட ஆலோசகர் ரகித ராஜபக்ஷ ஆகியோர் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளது.

 இந்த குழு இலங்கையில் கிரிக்கெட்டின் வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாப்பதற்காக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட் கவுன்சில்கள், கூட்டமைப்புகள் மற்றும் நிறுவனங்களுடன் கண்காணிக்கவும், தொடர்பு கொள்ளவும், ஒருங்கிணைக்கவும் மற்றும் விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4