கொரியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

#SriLanka #Sri Lanka President #SouthKorea #work #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
கொரியாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையிலிருந்து தென் கொரியாவிற்கு தொழில் வாய்ப்பிற்காக செல்பவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

 இந்த ஆண்டு அதிகளவிலானோர் தொழில் வாய்ப்புக்காக தென் கொரியாவிற்கு சென்றுள்ளமையே இந்த அதிகரிப்புக்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த வகையில், இந்த வருடத்தின் கடந்த 9 மாதங்களில் மாத்திரம் தென்கொரியாவிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 91 ஆக பதிவாகியள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இது கடந்த வருடங்களை காட்டிலும் 44 சதவீத அதிகரிப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கையில் இருந்து கடந்த வருடம் முழுவதும் தொழில்வாய்ப்பு நிமித்தம் தென்கொரியாவிற்கு மூவாயிரத்து 460 பேர் மாத்திரமே சென்றிருந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4