ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் சீன கப்பல் தொடர்பில் எடுக்கப்படும் முக்கிய முடிவு!

#SriLanka #Sri Lanka President #China #Ranil wickremesinghe #Ship
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் பின்னர் சீன கப்பல் தொடர்பில்  எடுக்கப்படும் முக்கிய முடிவு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னர், சீன ஆராய்ச்சிக் கப்பலை இலங்கை துறைமுகங்களை பார்வையிட அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

 சீனாவின் சியான் 6 என்ற ஆய்வுக் கப்பலின் இலங்கை வருகைக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 இந்தக் கப்பல் எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்புக்கு வரும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் இந்த சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

 ஜனாதிபதியின் சீன விஜயம் இம்மாத நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், சீன ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளன.

 இதேவேளை சீன ஆராய்ச்சிக் கப்பலுடன் இணைந்து ருகுணு பல்கலைக்கழகம் மேற்கொள்ளவிருந்த ஆராய்சி ஒப்பந்தம் இந்தியாவின் அழுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4