இராணுவ ஆட்சிக்குள் இலங்கை செல்வதற்கான சாட்சியே முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்!

#SriLanka #Jaffna #Protest #Mullaitivu
PriyaRam
2 years ago
இராணுவ ஆட்சிக்குள் இலங்கை செல்வதற்கான சாட்சியே முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்!

இலங்கையானது இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணியான மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

“இந்த அரசாங்கம்,அல்லது இங்கு அரசாங்கத்தில் காணப்படும் தவறான தலைமைகள் திரைமறைவில் ஒரு மிகவும் தவறான காரியம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் ஒரு மிகவும் நேர்மையான நீதிபதி பதவி விலகியுள்ளார். அதுமட்டுமல்லாது அவர் தனது உயிர் பயத்திற்காக நாட்டைவிட்டும் தப்பி சென்றுள்ளார்.

இது இங்கே வருத்தத்திற்குரிய விடயமாகும். எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்போரை வெளிக்கொணர நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

இதற்காகத்தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஒரு பகுதியாகத்தான் இந்த போராட்டங்கள் கொழும்பிலும் நடைபெறுகிறது.

 இந்த சம்பவம் இந்த நாடு ராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாகவே காணப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4