நிதானத்துடன் இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள் , ஆனால் விருச்சிக ராசியினருக்கு?

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
11 months ago
நிதானத்துடன் இருக்க வேண்டிய இரு ராசிக்காரர்கள் , ஆனால் விருச்சிக ராசியினருக்கு?

மேஷம்

அசுவினி : திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பாராத வரவு உண்டாகும். பரணி : துணிச்சலுடன் செயல்பட்டு நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவீர். வரவின் வழியே மகிழ்ச்சி அடைவீர்கள். கார்த்திகை 1 : வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். உங்கள் ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : வியாபாரத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். பொருளாதார நெருக்கடி நீங்கும். ரோகிணி : கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை அவசியம். உங்கள் தன்மானத்தை சீண்டுமாறு சிலர் செயல்படலாம். மிருகசீரிடம் 1,2 : பொருளாதார நெருக்கடி விலகும். யாருக்கும் எந்த வாக்குறுதியும் இன்று வழங்க வேண்டாம்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : குழப்பம் விலகி தெளிவடைவீர். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திருவாதிரை : உழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயலை நிறைவேற்ற தீவிர முயற்சி மேற்கொள்வீர். புனர்பூசம் 1,2,3 : உங்கள் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம், மனதில் இருந்த குழப்பம் விலகும்.

கடகம்

புனர்பூசம் 4 : செலவு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். புதிய முயற்சிகளில் நெருக்கடி ஏற்படும். பூசம் : உங்கள் எண்ணம் நிறைவேறும். யோசித்து செயல்படுவதால் நல்லது. ஆயில்யம் : திட்டமிட்டு செயல்படுவீர். மனதில் நிம்மதி உண்டாகும் உங்கள் அறிவாற்றல் வெளிப்படும்.

சிம்மம்

மகம் : வராமல் இருந்த பணம் வசூலாகும். உடலில் ஏற்பட்ட சங்கடம், நோய்களால் உண்டான பாதிப்பு விலகும். பூரம் : உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். உத்திரம் 1 : வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். லாபம் கூடும். உங்கள் வாக்கிற்கு மரியாதை உண்டாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : வியாபாரம் முன்னேற்றம் அடையும். தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். அஸ்தம் : வருமானத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் அணுகுமுறையால் ஒரு முயற்சி வெற்றியாகும். சித்திரை 1,2 : பணிபுரியும் இடத்தில் திறமை வெளிப்படும். நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.

துலாம்

சித்திரை 3,4 : நெருக்கடி நீங்கும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சுவாதி : தந்தை வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3 : அறிமுகம் இல்லாதவரிடம் உங்கள் பிரச்னைகளை பேச வேண்டாம். கோயிலுக்கு செல்வீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4 : நேற்றிருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். அனுஷம் : இனம் புரியாத குழப்பமும், நட்புகளிடம் மோதலும் உண்டாகும். பிரச்னைகளை சந்திக்க நேரும். கேட்டை : நினைப்பது ஒன்று நடப்பது வேறாக இருக்கும். வாகனத்தை இயக்குவதில் எச்சரிக்கை அவசியம்.

தனுசு

மூலம் : நண்பர்கள் வழியே நன்மைகளைக் காண்பீர். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும். விருப்பம் நிறைவேறும். பூராடம் : உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் ஒரு முயற்சி வெற்றியாகும். உத்திராடம் 1 : பொருளாதார வரவு திருப்தி தரும். நீண்ட நாட்களுக்குப்பின் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : வழக்கு சாதகமாகும். சங்கடம் விலகி உற்சாகமுடன் செயல்படுவீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். திருவோணம் : எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகி செல்வாக்கு உயரும். நீங்கள் நினைத்ததை அடைவீர்கள். அவிட்டம் 1,2 : உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : மனதில் குழப்பம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். சதயம் : குடும்பத்தில் சலசலப்பு ஏற்படும். பிள்ளைகளுடன் பிரச்னை உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பூரட்டாதி 1,2,3 : நீங்கள் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளைக் காண முடியாமல் போகும். உறவினரால் சங்கடம் தோன்றும்.

மீனம்

பூரட்டாதி 4 : வேலை பளு அதிகரிக்கும். வழக்கமான வேலைகளிலும் தடைகளை சந்திப்பீர். உத்திரட்டாதி : மனதில் இருந்த குழப்பமும் பதட்டமும் நீங்கும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ரேவதி : செயல்களில் நெருக்கடி உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் இன்று தலையிடாமல் இருப்பது நல்லது.