அரசியல்வாதியுடன் கருத்து முரண்பாடு: முக்கிய ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகல்

#SriLanka #government #Department #land #Tamil News
Mayoorikka
2 years ago
அரசியல்வாதியுடன் கருத்து முரண்பாடு: முக்கிய ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகல்

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிலந்த விஜேசிங்க, தனது இராஜினாமா கடிதத்தை காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் நேற்று (05) மாலை கையளித்துள்ளார்.

 காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான 40 ஏக்கர் காணி தொடர்பில் அரசியல்வாதி ஒருவருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் காரணமாகவே அவர் இராஜினாமா செய்துள்ளதாக உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

 காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் தாம் நியமிக்கப்பட்டு ஏறக்குறைய 4 வருடங்கள் கடந்ததாகவும், அந்தக் காலப்பகுதியில் கோவில்களுக்கும், பத்திரப்பதிவு இல்லாதவர்களுக்கும் சட்டரீதியாக காணி வழங்கக் கூடியவர்களுக்கும் உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சுக்கு ஆதரவளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 தாம் சட்டரீதியாக செயற்பட்டதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு கோரிக்கைகள் கிடைத்த போதிலும், அவற்றை நிறைவேற்ற தாம் செயற்படவில்லை எனவும் விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4