பாராளுமன்றத்தின் நடுவில் திடீரென போராட்டத்தில் குதித்த தமிழ் எம் பிக்கள்! திணறிய பிள்ளையான்

#SriLanka #Parliament #Protest #sanakkiyan #sritharan
Mayoorikka
2 years ago
பாராளுமன்றத்தின் நடுவில் திடீரென போராட்டத்தில் குதித்த தமிழ் எம் பிக்கள்! திணறிய பிள்ளையான்

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வழங்க கோரி பாராளுமன்றில் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார்.

 பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறித்த விடயம் தொடர்பில் பேசிவிட்டு திடீரென பதாகைகளை தாங்கி பாராளுமன்றத்துக்கு நடுவில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

 இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், த.கலையரசன் வினோ நோகராதலிங்கம், உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எமது நிலம் எமக்கு வேண்டும், எமது நிலங்கள் மற்றும் வளங்களை அழிக்காதே என கோஷமிட்டு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். 

 அதிலும் குறிப்பாக மட்டக்களப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் ஆளும் கட்சியினரோடு இணைந்து போராட்டத்துக்கான எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த விடயம் தொடர்பில் நீர்பாசன அமைச்சின் செயலாளரிடம் கலந்துரையாடி தீர்வினை பெற்று தருவதாக உறுதியளித்தார்

images/content-image/2023/10/1696573323.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4