நான்கு மாத பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் தந்தை கைது

#SriLanka #Arrest #Sexual Abuse
Prathees
2 years ago
நான்கு மாத பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் தந்தை கைது

நான்கு மாத பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தந்தை மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 மொனராகலை, சிறிகல, மொனராகலை வத்த பிரதேசத்தை சேர்ந்த முப்பத்தொரு வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் ஒப்படைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், சிறிது தூரம் சென்றதும் குழந்தை ஓயாமல் அழும் சத்தம் கேட்டதாகவும், வீடு திரும்பியபோது தனது கணவர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டதாகவும் சிறுமியின் தாய் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 அதன் பிரகாரம் மனைவி அவரை தாக்கியதுடன் குழந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4