தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு செல்லும் புனித ஆனாள் தேசிய கல்லூரி மாணவர்களுக்கு உதவிய வங்காலை சுவிஸ் அமைப்பு

#SriLanka #Mannar #School #sports #sri lanka tamil news #Vankalai #national
Prasu
2 years ago
தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு செல்லும் புனித ஆனாள் தேசிய கல்லூரி மாணவர்களுக்கு உதவிய வங்காலை சுவிஸ் அமைப்பு

புனித ஆனாள் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரால் (ரூபாய்40000) நிதி கையளிக்கப்பட்டது.

மன் /புனித ஆனாள் தேசிய கல்லூரியின் இருந்து தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு (எல்லே)செல்லும் மாணவர்களின் செலவினை குறைக்கும் முகமாக பாடசாலையின் ஆசிரியர் அருட்சகோதரர் அனி ஜோசப் அவர்களினால் எமது குழுவிடம் கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனை கருத்தில் எடுத்த எமது அமைப்பு உடனடியாக பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் இவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி கலந்தாலோசித்தமைக்கு அமைவாக இன்று காலை வியாழக்கிழமை (05.10.2023 ) கல்லூரியின் காரியாலயத்தில் வைத்து தற்காலிக அதிபர் அருட்சகோ. சாந்தன் அவர்களிடம் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திருவாளர் ஜெ.மெல்பர். டலிமா, பாடசாலை விளையாட்டு துறை ஆசிரியர்,புனித ஆனால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திக்குழு வங்காலை சுவிஸ் அமைப்பின் செயலாளர் திருவாளர் விக்மன் லியோன் மார்க், அமைப்பின் உப தலைவி விஜிதா , அமைப்பின் நிதி பொறுப்பாளர் அமல் சதீஸ் ஆகியோர் முன்னிலையில் 40000/= பணம் புனித ஆனால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி குழு வங்காலை சுவிஸ் அமைப்பினரால் நிதி கையளிக்கப்பட்டது.

images/content-image/1696612878.jpg

இவ் நிதியானது வெள்ளிக்கிழமை (06.10.2023) தேசிய மட்டத்தில் எல்லே விளையாட்டிற்கு செல்லவிருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் வருகின்ற மாதம் தேசிய அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் புனித ஆனாள் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என கல்லூரியின் தற்போதைய அதிபர் அருட்சகோதரர் சாந்தன் அவர்கள் எமது குழுவிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4