நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து பண மோசடி செய்ய முயன்ற நபர் கைது

#SriLanka #Arrest
Prathees
2 years ago
நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து பண மோசடி செய்ய  முயன்ற நபர் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தை மோசடி செய்ய முயற்சித்த ஒருவர் மாலம்பே பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

 முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் செயலாளர் போல் நடித்து வெளிநாட்டு தொழில்வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் பணம் மோசடி செய்ய குறித்தநபர் முயற்சித்துள்ளார்.

 வீரகட்டிய பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேக நபர் ஜப்பானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ள முயன்றதாக தெரிவிக்கப்பட்டது.

 நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படிஇ சந்தேக நபர் வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்ததற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4