கன்னி ராசியினருக்கு எதிர்பார்த்த வருவாயால் சங்கடம் விலகும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 year ago
கன்னி ராசியினருக்கு எதிர்பார்த்த வருவாயால் சங்கடம் விலகும் - இன்றைய ராசிபலன்

மேஷம்: 

அசுவினி : ஒரு சிலர் திருப்பதி பெருமாளை வழிபடுவீர்கள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும். பரணி : நீங்கள் ஈடுபடும் முயற்சியில் லாபம் தோன்றும். சொத்து விவகாரத்தில் உண்டான பிரச்னை தீரும். கார்த்திகை 1 : தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். முயற்சியில் இருந்த தடை நீங்கும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4 : குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். ரோகிணி : வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மிருகசீரிடம் 1,2 : சுறு சுறுப்பாக செயல்பட்டு நீங்கள் எண்ணியதை அடைவீர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4 : உங்கள் செயல்களில் சில நெருக்கடி தோன்றும். சிந்தித்து செயல்படுங்கள். அமைதி நிலவும். திருவாதிரை : மனதில் தேவையற்ற பயம் வரும். தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். புனர்பூசம் 1,2,3 : உங்கள் செயலில் தடை உண்டாகும். போட்டியாளர்களால் சங்கடம் தோன்றும்.

கடகம்: 

புனர்பூசம் 4 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பூசம் : உங்கள் பேச்சாற்றலால் மனம் மகிழத்தக்க சம்பவம் நடைபெறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடியும். ஆயில்யம் : வேலை பளு அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் நிறைவேறும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

சிம்மம்: 

மகம் : எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். பூரம் : வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள். வேலை தேடியவர்களுக்கு நல்லதகவல் கிடைக்கும். உத்திரம் 1 : நீண்ட நாள் எண்ணம் ஒன்று பூர்த்தியாகும். வேலையாட்களால் ஆதாயம் அதிகரிக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4 : வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். அஸ்தம் : நண்பர்கள் உதவியுடன் உங்கள் செயலில் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். சித்திரை 1,2 : தேங்கியிருந்த பொருட்கள் விற்பனையாகும். எதிர்பார்த்த வருவாயால் சங்கடம் விலகும்.

துலாம்: 

சித்திரை 3,4 : குழப்பங்களில் இருந்து விடுபடுவீர். புதிய வேலைக்குரிய முயற்சிகளை மேற்கொள்வீர். சுவாதி : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விசாகம் 1,2,3 : உங்கள் முயற்சிகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த சங்கடங்களும் குழப்பமும் விலகும். உங்கள் செயல்கள் இன்று லாபமாகும். அனுஷம் : மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். ஒரு சிலர் பெருமாள் வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். கேட்டை : உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். நினைத்ததற்கு மாறாக சிலவற்றில் பிரச்னை உண்டாகும்.

தனுசு

மூலம் : இரவு வரை உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள். முயற்சியில் இருந்த தடை நீங்கும். பூராடம் : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் எண்ணம் பலிதமாகும். உத்திராடம் 1 : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4 : மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். திருவோணம் : உடல் நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். மனம் மகிழும் படியான சம்பவம் இன்று நடந்தேறும். அவிட்டம் 1,2 : கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். எதிரிகள் விலகிச் செல்வர். 

கும்பம்: 

அவிட்டம் 3,4 : புதிதாக பிரச்னைகளில் பெரியோர் ஆதரவால் எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். சதயம் : குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். பூரட்டாதி 1,2,3 : இழுபறியாக இருந்த ஒரு முயற்சி இன்று பூர்த்தியாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். 

மீனம்: பூரட்டாதி 4 : வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். உத்திரட்டாதி : குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ரேவதி : வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் அதிகரிக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!