உறக்கத்தில் அதிக கனவு காண்கிறீர்களா? இதுவே காரணம்
கனவுகள் நிறைய வருவதற்கும் மன ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக மருத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஏதேனும் நோயா? இதற்கென மருந்துகள் இருக்கின்றனவா என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியம்.
குறிப்பாக கனவுகள் அதிகமாக வருவதற்கு காரணம் என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மில் நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்.
அதாவது இரவில் தினமும் கனவு வரலாம். அதிகமாக கனவு வருவதால் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் செல்ல முடியாமல் இருக்கும்.
இதனால் அடுத்த நாள் பகல் நேரங்களில் அதிக உடல் சோர்வுடன் இருப்பார்கள். இதற்கு முக்கியக் காரணமே தூக்கத்திலும் மனம் விழிப்பு நிலையிலேயே இருப்பது, உணர்வு ரீதியான தாக்கங்கள் மற்றும் மூளையின் அழுத்தம் ஆகியவை சேர்ந்து அதிகப்படியான கனவால் சோர்வை உண்டாக்குகின்றன.
தொடர்ச்சியாக மன அழுத்தம் மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படும் போது மூளையில் ஏற்படுகிற ஒருவித அழுத்தம் தொடர் கனவுகளை உற்பத்தி செய்கின்றன என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது நம்முடைய ஆழ்மனம் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். அப்போது நமக்கு வரும் தொடர்ச்சியான கனவுகள் நம்முடைய தூக்கத்தைக் கெடுத்துவிடும். இதனால் உடல் அசதியும் பகல் நேர சோர்வும் ஏற்படுகிறது.
சிலருக்கு இது மாதக்கணக்கில் தொடரும்போது மூச்சுத்திணறல், நினைவாற்றல் குறைபாடு போன்ற சிக்கல்களும் உண்டாகலாம். அதனால் தியானம் போன்றவற்றைச் செய்வதன் மூலம் மனதை இலகுவாக வைத்திருங்கள். அது கனவின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உதவி செய்யும்.
சில வகை மருந்துகள்
இது கேட்கவே ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உண்மை என்கிறார்கள் மருததுவர்கள்.
நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில வகை மருந்துகளால் கூட நம்முடைய தூக்கச் சுழற்சி பாதிக்கப்படும். தூக்க சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவது கனவுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
தூக்கக் கோளாறுகள் (sleeping disorders)
தூக்கச் சுழற்சியில் பிரச்சினை நீடிக்கும் போது அது நாளடையில் தூக்கக் கோளாறு நோய்களாக மாறிவிடுகின்றன.
இத்தகைய தூக்க கோளாறு பிரச்சினை இருப்பவர்களுக்கு அப்னீயா, ஓய்வின்மை, கால் குடைச்சல் போன்ற பல பிரச்சினைகளும் சேர்ந்து ஏற்படும். இதென் காரணமாகவும் மோசமான கனவுகள் ஏற்படலாம்.