ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவிப்பு!

#2023 #Tamilnews #Scientists #Breakingnews #Scientist
Mani
1 year ago
ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது என்று இஸ்ரோ அறிவிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, 'ஆதித்யா எல்1' விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., - சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ கடந்த செப்.,2ல் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, 'லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1' என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு, அங்கிருந்தபடி சூரியனை ஆய்வு செய்யும்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான துாரம் 15 கோடி கிலோ மீட்டர். ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இதுவரை 4 முறை உயர்த்தப்பட்டது. இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆதித்யா எல்-1 விண்கலம் செயல்பாடு நன்றாகவும் சரியான பாதையிலும் சென்று கொண்டிருக்கிறது.

சூரியனின் எல் 1 புள்ளியை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டப்படி பயணிக்கிறது. ஆதித்யா விண்கலத்தை ஹாலோ சுற்றுப்பாதை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஹாலோ பாதைக்கு விண்கலத்தை மாற்றம் செய்வதற்கான பணிகள் அக்டோபர் 6ல் 16 விநாடிகள் வெற்றிகரமாக நடந்தன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!