கடக ராசியினருக்கு உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும் - இன்றய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
கடக ராசியினருக்கு உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும் - இன்றய ராசிபலன்

மேஷம்

அசுவினி : செயல்களில் தடை உண்டானாலும் அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல் விலகும். வரவு அதிகரிக்கும். பரணி : நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.செயல் நினைத்தபடி நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். கார்த்திகை 1 : உறவினர்கள் உதவியால் உங்கள் செயல் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். அரசு வழி செயல்களில் எச்சரிக்கை அவசியம். ரோகிணி : பணிபுரியும் இடத்தில் வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் உங்கள் வேலையை சரியாக செய்வீர்கள். மிருகசீரிடம் 1,2 : உங்கள் முயற்சி வெற்றியாகும். நண்பர்கள் ஆதரவுடன் செயலில் வெற்றி காண்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : நேற்று தடைபட்டு இருந்த முயற்சி இன்று நடந்தேறும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். திருவாதிரை : புதிய முயற்சி ஆதாயம் தரும். அரசியல்வாதிகள் எண்ணம் இழுபறியாகி நிறைவேறும். புனர்பூசம் 1,2,3 : துணிச்சலுடன் செயல்படுவீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.

கடகம்

புனர்பூசம் 4 : உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பூசம் : தடைபட்டிருந்த சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். வரவு செலவில் கவனம் அவசியம். ஆயில்யம் : உங்கள் முயற்சியால் ஒரு செயலில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்:

மகம் : திட்டமிட்டு செயல்படுவதால் குழப்பம் நேராது. செயல்களில் முன்னேற்றம் காண்பீர். பூரம் : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர். உத்திரம் 1 : உங்கள் மனம் காட்டும் வழியில் இன்று செயல்படுவீர். கவனக்குறைவால சில சங்கடம் தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : திடீரென்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர். செலவு அதிகரிக்கும். வருவாயில் நெருக்கடி ஏற்படும். அஸ்தம் : தேவையற்ற குழப்பம் மனதில் தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உறவுகளுடன் சங்கடம் உண்டாகும். சித்திரை 1,2 : அலுவலகத்தில் மற்றவர் செய்த தவறுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரும். விழிப்புணர்வு தேவை.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். மகிழ்ச்சி அதிகரிக்கும். சுவாதி : லாபகரமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர். நீங்கள் விரும்பியதை அடைவீர். எதிர்பார்த்த தகவல் வரும். விசாகம் 1,2,3 : வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவருக்கு நல்ல தகவல் வரும். உங்கள் முயற்சி பலிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4 : அரசு வழியில் நன்மை உண்டாகும். தொழிலில் இருந்த நெருக்கடி அகலும். நிம்மதி ஏற்படும் நாள். அனுஷம் : வியாபாரத்தில் மேற்கொண்ட முயற்சியில் அனுகூலம் தோன்றும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். கேட்டை : நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

தனுசு

மூலம் : வழக்கு விவகாரம் சாதகமாகும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் முன்னேறுவீர்கள். பூராடம் : தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடம் தீரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்திராடம் 1 : மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : நேற்று உண்டான சங்கடம் இன்று இல்லாமல் போகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். திருவோணம் : வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கமான செயல் இழுபறியாகி பின்னர் முடியும். அவிட்டம் 1,2 : வீண்சச்சரவு உங்களைத் தேடி வரும். நிதானத்தைக் கடைபிடித்து பொறுமையுடன் செயல்படுங்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : புதிய நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி முன்னேற்றத்தை நோக்கி நகரும். சதயம் : தம்பதிகளுக்குள் உண்டான பிரச்னை விலகும் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை. பூரட்டாதி 1,2,3 : உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். பெற்றோர் உடல் நலனில் அக்கறை செலுத்தவும்.

மீனம்

பூரட்டாதி 4 : மனதில் ஆசை அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான சங்கடம் நீங்கும். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி : சட்டத்திற்கு புறம்பான செயல்களில் சங்கடம் தோன்றும். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. ரேவதி : புதிய நண்பர்களால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.