ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!

#India #Tamil Nadu #HeavyRain #Tamilnews #Breakingnews #River #Karnataka
Mani
1 year ago
ஒகேனக்கல்லுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!

காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் ஆகிய இரு அணைகளில் இருந்தும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 7 ஆயிரம் கன அடி உபரி நீர் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து நேற்று 5603 கன அடியாக குறைந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகவும் தமிழக-கர்நாடாக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று முதலே அதிகரிக்க தொடங்கியது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை படிப்படியாக உயர்ந்து நிலவரப்படி 9500 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறி பாய்ந்து செல்கிறது. கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவை பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!