'லியோ' படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #2023 #Tamilnews
Mani
2 years ago
'லியோ' படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகும் என்று அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 'லியோ' படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'அன்பெனும்' பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'அன்பெனும்' பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4