கடல்சார் அனர்த்தங்களால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
கடல்சார் அனர்த்தங்களால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மிகவும் பரபரப்பான கப்பல் பாதை இலங்கையைச் சுற்றி அமைந்துள்ள நிலையில்,  எண்ணெய் கசிவு காரணமாக கடல்சார் அனர்த்தங்களால் இலங்கை தொடர்ந்து பாதிக்கப்படும் அபாயம் அதிகமாக உள்ளது.  

இந்நிலையில் கடல் சூழலுக்கு ஏற்படும் அபாயங்களை நிர்வகிப்பதற்கு கடற்படைக்கும் கடலோரக் காவல்படைக்கும் இடையிலான ஒத்துழைப்பு இன்றியமையாத காரணியாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். 

அனர்த்த இடர் முகாமைத்துவம் மற்றும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தில் ஜப்பான் பங்கு பற்றிய மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இதேவேளைஅறிவுப் பகிர்வு, தர மேம்பாடு, தொழில்நுட்ப பரிமாற்றத் திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனான செயலில் ஈடுபாடு ஆகியவற்றின் மூலம், இந்தியப் பெருங்கடல் ஒன்றிய உறுப்பு நாடுகளில் பேரழிவைத் தாங்கும் திறனை அதிகரிப்பதில் ஜப்பான் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4