குடும்ப நெருக்கடிகளை திறமையால் சமாளிக்கும் தனுசு ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
குடும்ப நெருக்கடிகளை திறமையால் சமாளிக்கும் தனுசு ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி : நேற்று திட்டமிட்ட செயலில் முன்னேற்றம் காண்பீர். தொழிலில் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பரணி : காலையில் சில தடைகளை சந்தித்தாலும் அதன்பின் நிலை மாறும். உங்கள் செயல் வெற்றியாகும். கார்த்திகை 1 : பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : காலையில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் மதியத்திற்குள் வெற்றி காண்பீர்கள். ரோகிணி : உறவினர் ஆதரவுடன் உங்கள் தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2 : இன்றைய முயற்சிகள் தள்ளிப் போகும். சொத்து விவகாரத்தில் இழுபறி உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : காலையில் சில செயல்களில் தடை ஏற்பட்டாலும் இரவிற்குள் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். திருவாதிரை : நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் 1,2,3 : உங்கள் திறமை வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி எளிதாக நிறைவேறும்.

கடகம்

புனர்பூசம் 4 : குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர். எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன் வசூலாகும். பூசம் : செயலில் வேகம் இருக்கும். வாக்கு வன்மையால் உங்கள் முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். ஆயில்யம் : வியாபாரத்தில் நீங்கள் நினைத்த மாற்றத்தை செய்வீர். அரசு வழி முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும்.

சிம்மம்

மகம் : உங்கள் செயல்களில் இருந்த தடை விலகும். அடுத்தவரை நம்பி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம். பூரம் : திருப்பு முனையான நாள். காலையில் குழப்பம் இருந்தாலும் மதியத்திற்கு மேல் எண்ணம் நிறைவேறும். உத்திரம் 1 : பெரியவர்கள் வழிகாட்டுதல் படி உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த வெற்றியை இன்று அடைவீர்.

கன்னி

உத்திரம் 2,3,4 : காலையில் விறு விறுப்பாக செயல்பட்டு லாபம் காண்பீர். மதியத்திற்கு மேல் வீண் செலவு கூடும். அஸ்தம் : நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். உங்கள் விருப்பம் நிறைவேறும். சித்திரை 1,2 : எதிர்பாராத செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.

துலாம்

சித்திரை 3,4 : உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். நட்புகளால் மகிழ்ச்சி உண்டாகும். சுவாதி : எதிர்பார்த்த வரவு வரும். நெருக்கடியை உண்டாக்கி வந்த பிரச்னை முடிவிற்கு வரும். விசாகம் 1,2,3 : வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். வழக்கில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும்.

விருச்சிகம்

விசாகம் 4 : உங்கள் செயலில் வேகம் இருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்கள். அனுஷம் : உங்கள் முயற்சி நிறைவேறும் மற்றவர்களுக்கு அனுகூலமாக இன்று செயல்படுவீர்கள். கேட்டை : வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பாராத வரவு வந்து உங்கள் நெருக்கடியை போக்கும்.

தனுசு

மூலம் : எதிர்காலம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். பூராடம் : சேமிப்பில் கவனம் செலுத்துவீர். புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். வரவு அதிகரிக்கும். உத்திராடம் 1 : குடும்ப நெருக்கடிகளை உங்கள் திறமையால் சமாளிப்பீர். நீண்ட முயற்சி பலிக்கும்.

மகரம்:

உத்திராடம் 2,3,4 : வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வரவு அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் தரும். திருவோணம் : மூன்றாமிட ராகுவால் தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். அவிட்டம் 1,2: மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். துணிவுடன் செயல்பட்டாலும் உங்கள் முயற்சி இழுபறியாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4 : வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். சதயம் : எதிர்பார்த்த பணம் வரும். உற்சாகம் அதிகரிக்கும். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். பூரட்டாதி 1,2,3 : அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சச்சரவு விலகும்.

மீனம்:

பூரட்டாதி 4 : பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உத்திரட்டாதி : நண்பர்கள் உதவியால் உங்கள் முயற்சி லாபமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ரேவதி : பணி புரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள்.