இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#SriLanka #weather #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி ஊவா, மத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கு மேல் அதிகபட்சமாக மழைப் பெய்யக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் மேல் மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் சிலநேரம்  மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இடியுடன் கூடிய மழை,  தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4