காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த தந்தை ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Vavuniya #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த தந்தை ஒருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா ஆறுமுகம் என்ற தந்தையே தன்னுடைய 65 ஆவது வயதில்  மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய மகனை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்டு நீண்டகாலமாக தன்னுடைய மகனுக்காக குரல் கொடுத்து வந்தார். 

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4