இந்தியாவின் விடுதலைக்கு முதுகெலும்பாக இருந்த இஸ்லாமியர்களுக்கு இந்த கதியா?
உலகம் எங்கும் பரந்து வாழும் மக்களில் மற்றும் மதங்களில் இரண்டாவது இடத்தை பிடிப்பது சகோதர இஸ்லாமிய இனமே.
உலகம் ஆங்கில மோகத்திலும் அமெரிக்க ஆதரவிலும் மூழ்கி இருக்கும் இவ்வேளையில் அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் சில அமெரிக்க ஆதரவு நாடுகள் தமது நாட்டில் அல்லது தமக்கு அருகில் இருக்கும் இஸ்லாமிய மதத்தவர்களை சீண்டிப் பார்ப்பதும் அவர்களை அடக்கி ஆழ நினைப்பதும், அவர்கள் நிலங்களை வறுமையை சாதகமாக வைத்து தாம் கூடிய பணம் கொடுத்து அபகரிப்பதும் வளக்கமான ஒன்றாகிவிட்டது.
அவ்வகையில் பாலஸ்தீன நாடும் ஒன்றாகும்.அடுத்த நாட்டவனுக்கோ அடுத்த மத, இனத்தவனுக்கோ காணிகளை விற்பதும் தவறாக இருந்தாலும் ஆதிக்க வர்கத்தவர்கள் தமது தவறுகளை மறைப்பதும் தவறே.
இதில் இஸ்லாமியர்களில் சில மறைமுகமாக ஆதிக்க வர்க்கத்துக்கு ஆதரவாக இயங்குவதும் இஸ்லாமியர்களுக்கு உலக நாடுகளில் ஒரு அவப் பெயர் உண்டு. இருந்தும் இஸ்லாமியர்கள் மட்டுமா? இல்லை,இல்லை,இஸ்பானியாவில் கிறீஸ்தவர்களுக்கிடையே இருந்த ஒரு சிறுபானைமையான பிரிவு எவ்வளவு துன்பங்களுக்கு உள்ளாகியது என்பதை 1800 ஆண்டுகளின் வரலாறு தெரிந்தவர்கள் கூறுவார்கள்.
அவர்கள் மட்டுமா?சைவ சமையத்த சமய குரவர்களில் ஒருவர் சமணர்களை மத துவேசத்தால் கழுவில் ஏற்றியதை சரியான சமணம் சார்ந்தவர்களுக்கும், உண்மையான சைவர்களுக்கும் தெரியும்.
இதே போலதான் சில மதங்கள் மதம் பிடித்து ஆடும்பொழுது பாவம், புண்ணியம் மறைக்கப்படுகிறது. நாம் இப்பொழுது பார்ப்போமாக இருந்தால் ஒரு மார்க்கத்தை விமர்சிப்பவர் தான் தன் மார்க்க தவறுகளையும் விமர்சித்தால் அனைத்து மதங்களும் ஒற்றுமையாக இருப்பர்கள்.
ஒவ்வொரு மதத்தின் கொள்கையும் மனிதத்துக்கு செல்லும் வழியாகும்.முடிவு மனிதமே மாண்பாகும் இதை நாம் புரிந்தால் நாமே மனிதர்கள் புரியாமல் நான் பெரிது நீ பெரிது உனது, எனது பெரிது என்பவர்கள் வெறும் விசம் பிடித்த மன நலம் குன்றிய நாய்களை விட கேவலமானவர்களே. மதம், மார்க்கம் என பாத்தால் இ ந் தியர்களில் அனேக மானவர்கள் இஸ்லாமியர்களின் பூர்வீகமாக உள்ளது.
இந்தியாவில் விடுதலைக்கி பல இஸ்லாமியர்கள் தோழ் கொடுத்ததை இந்தியாவின் தேசிய கீதத்தை இயற்றி இடம் பிடித்துள்ளார்கள். அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கணிசமான அழவில் தமிழ் புலவர்கள், பற்றாளர்கள், பற்பலர் இருக்கிறார்கள்.
ஏன் உலகத் தமிழ் அறிவிப்பாளர் ஒரு தமிழ் பித்தன் அப்துல் கமீத் ஆவார்.
அப்துல் கலாமை நாம் மறக்க முடியாது.
இப்படி இருக்கும்பொழுது ஒரு சில தீவிரவாத எண்ணம் கொண்ட இஸ்லாமியரை வைத்து நாம் அனைவரையும் ஒதுக்க முடியாது.