துலா ராசியினருக்கு நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
துலா ராசியினருக்கு நண்பர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பொருளாதாரப் பிரச்னை முடிவிற்கு வரும். பரணி : உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும். வியாபாரத்தில் உண்டான தடைகளை சரி செய்வீர். கார்த்திகை 1 : நண்பர்கள் ஒத்துழைப்பால் வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4 : குடும்பத்தினர் ஆதரவு அதிகரிக்கும். பிள்ளைகள் வளர்ச்சி உங்களுக்குப் பெருமையை உண்டாக்கும். ரோகிணி : பழைய செயல் ஒன்றில் ஆதாயம் உண்டாகும். பெரியோரின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். மிருகசீரிடம் 1,2 : மற்றவர் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளுவால் நெருக்கடி உண்டாகும். நேற்றைய முயற்சி நிறைவேறும். திருவாதிரை : வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாக்கும். புனர்பூசம் 1,2,3 : பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். அதிகாரியின் கேள்விகளால் மனம் சோர்வடையும்.

கடகம்

புனர்பூசம் 4 : முயற்சி லாபமாகும். தொழிலில் இருந்த தடை விலகும். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். பூசம் : எதிர்பார்த்த உதவி வரும். சிந்தித்து செயல்பட்டுவீர்கள். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி காண்பீர். ஆயில்யம் : துணிச்சலாக ஒரு செயலில் இறங்கி முன்னேற்றம்,லாபம் அடைவீர்கள். நிதிநிலை உயரும்.

சிம்மம்

மகம் : உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு வரும். பூரம் : தொழிலில் உண்டான போட்டியை சரி செய்வீர். உங்கள் முயற்சி ஆதாயத்தை ஏற்படுத்தும். வருவாய் அதிகரிக்கும். உத்திரம் 1 : வார்த்தைகளில் நிதானம் தேவை. ஒரு செயலை போராடி முடிப்பீர்கள். பொருளாதார நிலை உயரும். 

கன்னி

உத்திரம் 2,3,4 : மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி இழுபறியாகும். அஸ்தம் : புதிய நண்பர்களால் உங்கள் தேவை நிறைவேறும். வெளியூர் பயணத்தால் நன்மை அதிகரிக்கும். சித்திரை 1,2 : திட்டமிட்டு செயல்படுவீர். தொழிலை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். எதிர்ப்பு விலகும். 

துலாம்

சித்திரை 3,4 : உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திடீர் செலவு தோன்றும். பண நெருக்கடியால் சங்கடம் உண்டாகும். சுவாதி : குடும்பத்தினர் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார்கள். கையிருப்பு தொகை கரையும். விசாகம் 1,2,3 : நண்பருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

விருச்சிகம்

விசாகம் 4 : இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். வராமல் இருந்த பணம் உங்களைத் தேடி வரும். அனுஷம் : பிரபலங்கள் துணையுடன் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சொத்து சிக்கல் தீரும். கேட்டை : நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். எதிர்ப்பு விலகும். 

தனுசு

மூலம் : உங்கள் அணுகுமுறை தொழிலில் லாபத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த படி வியாபாரம் விருத்தி அடையும். பூராடம் : புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1 : பணியாளர்களுக்கு வேலை பளு கூடும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

மகரம்

உத்திராடம் 2,3,4 : மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைகளை விலக்கி முயற்சியில் முன்னேற்றம் காண்பீர். திருவோணம் : திட்டமிட்டபடி செயல்படுவீர். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். அவிட்டம் 1,2 : நீங்கள் செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4 : உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். சதயம் : வீண் பிரச்னை தோன்றும். நீங்கள் சங்கடப்படும் வகையில் சில செயல் இன்று நடந்தேறும். பூரட்டாதி 1,2,3 : குழப்பம் அதிகரிக்கும் பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும். நிம்மதி தேவையான நாள். 

மீனம்

பூரட்டாதி 4 : புதிய நண்பர் உங்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்வர். ஆசைகளுக்கு இடம் கொடுக்காதீர். உத்திரட்டாதி : பணி புரியும் இடத்தில் தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக் கொள்வீர். கவனம் தேவை. ரேவதி : வெளிநாட்டு முயற்சி ஆதாயமாகும். எதிர்பாராத வரவு உங்களைத் தேடி வரும்.