காசா பகுதிக்கு சென்ற இலங்கையின் இஸ்ரேலிய தூதுவர் அருகே எறிகணைகள் தாக்குதல்

#world_news #Israel #War
Prathees
2 years ago
காசா பகுதிக்கு சென்ற இலங்கையின் இஸ்ரேலிய தூதுவர் அருகே எறிகணைகள் தாக்குதல்

காசா எல்லையின் மேற்கு பகுதியில் வசிக்கும் இலங்கையர்களின் நிலைமையை அறிந்து கொள்வதற்காக கண்காணிப்புப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார, அப்பகுதியில் எறிகணைத் தாக்குதல் காரணமாக பயணத்தை இடைநிறுத்திவிட்டு நாடு திரும்பியுள்ளார்.

 இந்தத் தாக்குதல்கள் காரணமாக பயணத்தை நிறுத்திவிட்டு திரும்பிச் செல்லுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியதாக தூதுவர் கூறினார்.

 எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை அங்கு பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.

 காசா பகுதி மட்டுமல்லாது தூதரகம் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதும் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், அந்த தாக்குதல்களை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு எதிர்கொண்டு வருவதாகவும் தூதுவர் கூறுகிறார்.

 அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4