ஐமேக்ஸில் வெளியாகும் லியோ திரைப்படம்

#India #Cinema #Tamil Nadu #Actor #TamilCinema #Director #2023 #Vijay #Tamilnews
Mani
2 years ago
ஐமேக்ஸில் வெளியாகும் லியோ திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் லியோ. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் 19ம் தேதி லியோ படம் வெளியாக உள்ளது. சென்னையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் புதிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது, இது விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4