வரவு செலவுத் திட்டத்தில் 86 சதவீதம் எட்டு அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு!

#SriLanka #Parliament #budget #Ministry
Mayoorikka
2 years ago
வரவு செலவுத் திட்டத்தில் 86 சதவீதம் எட்டு அமைச்சுக்களுக்கு ஒதுக்கீடு!

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பிரகாரம் மொத்தப் பணத்தில் 86 வீதமானது அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் 8 அமைச்சுக்களுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

 இருபத்தொரு அமைச்சுக்களுக்கு 14 வீதத்திற்கும் குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இரண்டு அமைச்சுக்களுக்கு செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை மொத்த செலவில் 42 வீதம் என தெரிவித்த பேராசிரியர், நாட்டின் பாதுகாப்புக்காக 56500 கோடி ரூபா செலவிட எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இது மொத்த செலவில் 15 சதவீதம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்விக்காக 23700 கோடி ரூபாவே செலவிடப்படுவதாக தெரிவித்த திரு.வசந்த அத்துகோரள, இது பாதுகாப்புக்காக செலவிடப்படும் தொகையில் பாதி கூட இல்லை எனவும் தெரிவித்தார்.

 பாதுகாப்பு செலவீனத்தை விட சுகாதாரத்துக்கான 44000 கோடி ரூபாய் குறைவு என்றார். 29 அரசாங்க அமைச்சுக்கள் மற்றும் விசேட செலவினப் பிரிவுக்கு செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 386000 கோடி ரூபாவாகும் எனவும் இது கடந்த ஆண்டை விட 20300 கோடி ரூபா அதிகரிப்பு எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.

 அடுத்த ஆண்டுக்கான வன ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அப்பால் ஒரு சரிவைக் காட்டுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4