நாம் அழியும்பொழுது வேடிக்கை பார்த்தவனுக்காகவும் இரங்குவோம்! மக்களுக்காக

#world_news #Israel #War
Mayoorikka
2 years ago
நாம் அழியும்பொழுது வேடிக்கை பார்த்தவனுக்காகவும்  இரங்குவோம்! மக்களுக்காக

ஈழ தமிழர் 2009 இல் அழியும்பொழுது வேடிக்கை பார்த்து அரசுக்கு ஆதரவாக நின்ற இஸ்ரேல், பாலஸ்தீனம். 

 இருந்தும் நாம் மனித நேயம் உள்ளவர்கள். இருவரும் போரை நிறுத்தி உலக நாடுகளின் உதவியோடு தத் தம் உரிமைகளை பாகுபாடின்றி பிரித்து சமாதானத்துக்கு வரவேண்டும்.

 இல்லையேல் இது அண்டைய நாடுகளுக்கும் இரு தரப்புக்கு உதவுகின்றவருக்கும் அழிவையும் நீள் விரோத, குரோதத்தையும் உண்டுபண்ணும். 

 எமது ஆதரவு ஒரு நாட்டுக்கோ அல்லது படைகளுக்கோ மட்டுமல்ல. இரண்டு நாட்டு மக்களுக்கும். 

images/content-image/2023/10/1697276906.jpg

 உலகில் போரையும் போதையையும் வேரோடு பிடிங்குவோம். போர் செய்பவனும், தூண்டுபவனும், குற்றவாளிகளே. போதையை விற்பவனும், உற்பத்தி செய்பவனும், நுகருவோனும், கண்டுகொள்ளாமல் இருப்பனும் குற்றவாளிகளே.

 புனிதமான குறான், புனிதமான கீதை, புனிதமான பைபிள், புனிதமான, யூத ஆகமம் கூறும் நல்ல விடயங்களை மட்டும் மத, இன வேறுபாடில்லாமல் அனைவருக்கும் பொதுவான ஆற்றலை உள்வாங்கி நடந்தாலே மனிதன் வாழலாம் இல்லையேல் வல்லரசு நாடுகள் உங்களை தாம் வில்லாக இருந்து அம்பாக பாவிக்கின்றன. 

 உலக மக்களே விழிப்பாக இருங்கள். பழைய சில புனைவுகளை வைத்து உங்கள் உறவுகளை கொல்லாதீர்கள். தலைமைகள் எப்பொழுதும் தூண்டித்தான் விடும். அதற்குள் எரிவது நீங்கள். தற்சூழலில் மக்கள் எங்கெங்கு பாதிக்கப் படுகிறார்களோ அங்கங்கே குரல் கொடுப்போம்.

images/content-image/2023/10/1697277010.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4