வெல்லவாய பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெல்லவாய பிரதேசத்தில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

வெல்லவாய பிரதேசத்தில் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளுடன் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது  இரண்டு 12 போர் ரக துப்பாக்கிகள், 22 தோட்டாக்கள் மற்றும் 02 கைக்குண்டுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒக்கம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் இருந்து குண்டு துளைக்காத உடுப்பு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4