விருச்சிக ராசியினருக்கு வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும் - இன்றைய ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
7 months ago
விருச்சிக ராசியினருக்கு வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும் - இன்றைய ராசிபலன்

மேஷம்

அசுவினி : குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நேற்றைய முயற்சி நிறைவேறும்.எதிர்பார்த்த வருவாய் வரும். பரணி : வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் செயல் முன்னேற்றம் அடையும். கார்த்திகை 1 : கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4 : எதிர்ப்புகள் விலகும் ஆரோக்கியம் சீராகும்.. சொத்து விவகாரகப் பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். ரோகிணி : வெளியூர் பயணம் ஆதாயம் தரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மிருகசீரிடம் 1,2 : நேற்று இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை சாதிப்பீர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருவாய் வரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர். திருவாதிரை : பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : முயற்சிகளில் இருந்த தடை விலகும். உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும்.மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4 : செயல்களில் சில தடை ஏற்படும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோருக்கு சங்கடம் ஏற்படும். பூசம் : அலைச்சல் அதிகரிக்கும். கடும் போராட்டத்திற்கு பின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம் : வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்

மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூரம் : விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர். சகோதரர்களால் அனுபவம் ஒன்றை பெறுவீர்கள். உத்திரம் 1 : மற்றவரால் செய்ய முடியாத செயலை செய்து வெற்றி பெறுவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4 : குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். அஸ்தம் : வராமல் இழுபறியாக இருந்த பணம் வரும். உங்கள் முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். சித்திரை 1,2 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் ஆதரவால் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

துலாம்

சித்திரை 3,4 : மனதில் தேவையற்ற குழப்பம் வரும். உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும். சுவாதி : உழைப்பு அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் அடைவீர். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். விசாகம் 1,2,3 : விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வந்து சமாதானம் பேசுவர். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்

விருச்சிகம்

விசாகம் 4 : திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர். வெளியூர் பயணத்தில் நெருக்கடி தோன்றும். அனுஷம் : உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். கேட்டை : வாகன வகையில் செலவு ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வரவு செலவில் கவனம் தேவை.

தனுசு

மூலம் : நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர். பெரியவர்கள் ஆதரவு உண்டு. பூராடம் : வியாபாரத்தை விரிவு செய்வீர். உங்களுடைய பொது செயலுக்கு ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரி செய்வீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4 : வேலைக்காக முயற்சி செய்து வந்தவர்களுக்கு நண்பர்கள் வழியே தகவல் வரும். திருவோணம் : வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் செயல் லாபமாகும். அவிட்டம் 1,2 : உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை இன்று அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4 : உங்கள் குடும்பத்தினர் உதவியால் முயற்சி ஒன்று நிறைவேறும். உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சதயம் : செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். பூரட்டாதி 1,2,3 : உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்பட்டாலும் நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4 : குடும்பத்தில் தேவையற்ற பிரச்னை உண்டாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம், நெருக்கடி தோன்றும். உத்திரட்டாதி : சந்திராஷ்டமம் என்பதால் உங்கள் முயற்சிக்கு சங்கடமும் மனதில் குழப்பமும் அதிகரிக்கும். ரேவதி : உங்கள் கவனக்குறைவால் சில பிரச்னை உண்டாகும். வியாபாரத்திற்கான முயற்சியை தள்ளி வைப்பீர்கள்.