ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா வர்த்தமானியில் வெளியீடு!

#Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா வர்த்தமானியில் வெளியீடு!

ஊழல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதா வர்த்தமானியில்  வெளியிடப்பட்டுள்ளது.  

நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் உத்தரவுக்கமைய குறித்த சட்டமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஊழலுக்கு எதிரான சட்டத்தில் அரசியலமைப்பு பேரவை என்ற பிரிவிற்கு பதிலாக  இந்த புதிய சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சமீபத்தில். இந்தப் பிரிவில் உள்ள பிழைகள் காரணமாக, லஞ்சம் அல்லது ஊழல் புகார்களை விசாரிக்க புதிய ஆணைக்குழுவை அமைப்பது உள்ளிட்ட பல சிக்கல்கள் இனங்காணப்பட்டன.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் கருத்துப்படி, எதிர்வரும் வாரத்தில் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கூடிய விரைவில் நிறைவேற்றப்படும் என நம்பப்படுகிறது.  

இதேவேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது மேலும் தாமதமாகும் என விஜேதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.  இந்த சட்டமூலமானது இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4